12.13.2015

பாடம் - 1: எழுத்து



இலக்கணம் தேவையா?’ என்ற கேள்வியே கொஞ்சம் அர்த்தமற்றது!  
ஏன்
இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கண்டு... என்பது புலவர்களின் வழக்கு, அதாவதுஇப்படித்தான் இருக்க வேண்டும்’ (Prescriptive Grammar) என்று பிடிவாதம் பிடிப்பதல்ல இலக்கணம், ‘இப்படித்தான் இருக்கிறது’ (Descriptive Grammar) என்று எடுத்துக்காட்டுவதே இலக்கணம் 
என்வரையில் தமிழ் மொழியின் இலக்கணம் (பெரும்பான்மையும்) இரண்டாவது வகையே.

இலக்கணத்தை மீறலாமா? கண்டிப்பாக மீற வேண்டும், அதுவே வளர்ச்சி! ஆனால் மீற வேண்டும் என்றால் இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருந்தால்தானேஉடைத்து வெளியேறுவதுசாத்தியம், எதிலுமே சாராமல் வெளியே நிற்பவன்/ள் எதை உடைத்து எங்கே வெளியேறுவான்/ள்?  
இலக்கணம் கற்று, அதை உணர்ந்து பின் அதை மீறினால் நல்ல கவிதை கிடைக்கும், தமிழுக்கும் வளர்ச்சி என்பது என் (பணிவான) கருத்துஆனால், ஒன்று தெரியுமா?  
இலக்கணம் கற்றுவிட்டால் அதை மீறுவது கடினம் (காதல் மனைவியின்/கணவனின் கட்டுப்பாடு போலத்தான் இலக்கணமும்!)

எல்லாம் சரி, பார்த்தவுடன் வயிற்றில் புளி கரைகிறதே 
இலக்கணம் என்றாலே இமைகள் சொருகுகின்றனவே

பயணம் செய்கையில் சோற்றுமூட்டை எடுத்துச் சென்ற அனுபவம் உண்டா? கையில் இருக்கும் வரைதான் அது சுமை, அதையே தின்று செரித்து நம் உடலின் ஒரு பகுதியாக்கிவிட்டால்? அதைச் சுமப்பதை உணரோம், பயணத்திற்குத் தேவையான ஆற்றலையும் அதுவே தரும்: அப்படித்தான் இலக்கணமும்!  
உணர்வுக்கு வெளியில் நிற்கும் வரை  
அது காலில் பூட்டிய விலங்கு,  
உணர்ந்துவிட்டால் அதுவே நம் சிறகு

சரி சரி, எங்கிருந்து தொடங்கலாம்
எழுத்தில் இருந்தே தொடங்குவோமே; தொல்காப்பியரே அங்கேதான் தொடங்குகிறார்

எழுத்து எனப்படுப,
அகரம் முதல்
னகர இறுவாய், முப்பஃது' என்ப-
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.
-தொல். எழுத். நூன்மரபு – 1

தமிழ் எழுத்துக்கள் முப்பதே முப்பதுதான்.
12 உயிர், 18 மெய்.

சார்பு எழுத்துக்கள் என்று ஒரு மூன்றைச் சேர்த்துக்கொள்ளலாம்: குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ()

பின்னால் வந்த இலக்கண ஆசிரியர்கள் (குறிப்பாய் நன்னூல்) இந்தச் சார்பு எழுத்துக்களைப் பத்து வகையாக விரித்தனர் (இது ஒருவகையில் வளர்ச்சி, ஒரு வகையில் குழப்பம்!) இவற்றையெல்லாம் பின்னால் பார்க்கலாம்.

12 உயிர், 18 மெய் தெரியும்தானே? கடகடவென்று ஒருமுறை பார்த்துவிடுவோம்

உயிர்:

மெய்: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

உயிரில் குறில் நெடில் என்று இரண்டு வகை:
– 5 குறில் (ஒரு மாத்திரை* அளவு ஒலிக்கும்)
– 7 நெடில் (இரண்டு மாத்திரை)

மெய்யில் வல்லினம், இடையினம், மெல்லினம் என்று மூன்று வகை:
க் ச் ட் த் ப் ற்வல்லினம் (Hard) [நெஞ்சில் ஒலிப்பவை. உரக்கச் சொல்லிப் பாருங்களேன்!]
ய் ர் ல் வ் ழ் ள்இடையினம் (Middle) [கழுத்தில்]
ங் ஞ் ண் ந் ம் ன்மெல்லினம் (Soft) [வாய்/மூக்கு]

மெய்யெழுத்து எல்லாம் அரை மாத்திரை அளவு 
(உயிரோடு சேரும்பொழுது அதன் அளவே இதற்கும்.  
அதாவதுக்+=ஒரு மாத்திரதான், ஒன்றரை அல்ல! ‘காஇரண்டு மாத்திரை!)

*மாத்திரைகண்ணிமைக்கும் காலம் / கைநொடிக்கும் காலம் (ஏறத்தாழ ¼ வினாடி! ஆனால், நடைமுறையில் இதற்கும் குறுகிய காலம்தான் ஆகும்! தோராயமாக ஒரு நொடியில் பத்தில் ஒரு பங்கு எனலாம், அதாவது 0.1 நொடி)
 
ஆய்தம் என்பதும் தெரிந்ததே (இதன் உச்சரிப்பு இன்றுவரை உறுதியாகத் தெரியவில்லை, இப்போதைக்குஎஃகுஎன்பதைஎக்ஹுஎன்று கொள்கிறோம், பழைய இலக்கியங்களில்அஃதுஎன்று வருவதைஅக்ஹுதுஎன்று படிக்கிறார்கள், இது ஒருவகைஹூங்காரம்சேர்க்கும் எழுத்தாக கருதப்படுகிறதுவடமொழியின்விசர்கம்போல, Aspirates!)

குற்றியலிகரத்தைப் பார்க்கும் முன் குற்றியலுகரத்தைப் பார்த்துவிடுவோம்

ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கூட்டத்திற்குப் பிறகு சொல்லின் இறுதியில் வல்லினம் வந்து, அதில்உகரஉயிர் வந்தால் அதுதான் குற்றியலுகரம். இந்தஉகரம்தனக்கான ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரைமாத்திரைதான் ஒலிக்கும் (அதாவது ஒரு மெய்யெழுத்தைப் போல!)

குற்று + இயல் + உகரம் = குற்றியலுகரம் (இயல்பு குறைந்த உகரம்!)

இந்தக் குற்றியலுகரத்திற்குப் பிறகு ஒரு பெரிய மொழியியல் சூட்சுமமே ஒளிந்திருக்கிறது, அதை இங்கே சொன்னால் வளவளத்துவிடும் (இப்பவே அப்படித்தானே என்கின்றீர்களா?!)

குற்றியலுகரத்தை நன்றாகப் புரிந்துகொள்வது கொஞ்சம் தேவை

மறுபடி ஒருமுறை (இதை வைத்துதான் உங்களுக்கு முதல்ஹோம்வொர்க்’, கவனியுங்கள்!):

  • ஒரு மாத்திரை அளவுக்கும் மேற்பட்ட எழுத்துள்ள சொற்கள் (கடைசி எழுத்தைச் சேர்க்காமல்) (இரண்டு குறில் / ஒரு நெடில் / ஒரு குறில் ஒரு நெடில்... இப்படி!)
  • கடைசி எழுத்து ஒரு வல்லினம் (க், ச், ட், த், ப், ற்)
  • அதன் உயிர் உகரம் () (கடைசி எழுத்து ‘கு’ ‘சு’ ‘டு’ ‘து’ ‘பு’ ‘று’ -வில் ஒன்று!)
  • இந்த உகரம் ஓசை அளவில் குறையும் (1 மாத்திரை -> ½ மாத்திரை)


இதுவே குற்றியலுகரம்! சரியா?

விளக்கு, மெச்சு, பட்டு, படித்து, இனிப்பு, காடு* – குற்றியலுகரம்
அலகு, கொலுசு, தவிடு, தொடுதுகுற்றியலுகரம்
சங்கு, மஞ்சு, கண்டு, பந்து, வம்பு, கன்றுகுற்றியலுகரம்

கு, கொசு, விடு, து, பு, றுகுற்றியலுகரம் அல்ல (ஏன்?#)
உய்யு, தொடரு, கொல்லு, கவ்வு, நெகிழு, தெளிவுகு. அல்ல!^
திண்ணு, அம்மு, நின்னுகு. அல்ல!^

சரியா?

*கா-டுகடைசிக்கு முன் ஒரே ஒரு எழுத்துதானே இருக்கிறது? ஆனாலும் இது குற்றியலுகரம்தான், காரணம் இருக்கும் ஒரு எழுத்து நெடில், இரண்டு மாத்திரை அளவுள்ள நெடில் இரண்டு குறில்களுக்குச் சமம், எனவே நெடிலெழுத்திற்குப் பிறகு வரும் வல்லின உகரங்கள் குற்றியலுகரமே!
#இறுதியில் வல்லினம் + உகரம் வந்தாலும், சொல்லில் ஒரு எழுத்தே இருக்கிறது
^2ம் 3ம் வரிசைகள் [இறுதி எழுத்து] வல்லினமே அல்ல!

குற்றியலுகரத்தை நன்றாகப் புரிந்து கொண்டீர்களா? இனி அவற்றின் வகையைப் பார்ப்போம் (பயப்பட வேண்டாம், இது மிக எளிது!)

குற்றியலுகரத்திற்கு முன் என்ன எழுத்து இருக்கிறது என்பதை வைத்து அதனை வகைப்படுத்துகின்றோம்:

பழசு - /பழ்+சு/ - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் (குறில் உயிர்)
நாடு - /ந்+டு/ - நெடில் தொடர்க் குற்றியலுகரம்
கு - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் (ஃ - ஆய்தம்)
ப்பு - வன்தொடர்க் குற்றியலுகரம் (வன் - வல்லினம்: க், ச், ட், த், ப், ற்)
ங்கு - மென்தொடர்க் குற்றியலுகரம் (மென் - மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்)
தாழ்பு - இடைத்தொடர்க் குற்றியலுகரம் (இடை - இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்)


இனி பயிற்சி:  

விருப்பமானால் உங்கள் மதிப்பெண்ணை கருத்தில் பகிரலாம்!

அடுத்த பாடம்: அசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக